போராடும் பெண்களை அடக்க 'புர்கா' படைப்பிரிவு ! தாலிபான்கள் துப்பாக்கி முனையில் பயிற்சி!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போராடுகின்ற பெண்களை அடக்குவதற்காக தாலிபான்கள் பெண்கள் புர்கா படைப்பிரிவு ஒன்றை அமைத்து அவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.;
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போராடுகின்ற பெண்களை அடக்குவதற்காக தாலிபான்கள் பெண்கள் புர்கா படைப்பிரிவு ஒன்றை அமைத்து அவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மக்கள் ஆட்சியை தாலிபான் பயரங்கரவாதிகள் வீழ்த்தி கைப்பற்றினர். இதனையடுத்து அங்கு மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வரும் நிலையை தொடர்ந்து நீடித்து வருகிறது.
அப்படி தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். ஆனால் அந்த உத்தரவுகளை ஒரு சில பெண்கள் மதிக்காமல் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது போன்ற பெண்களை அடக்குவதற்காக பெண் போலீஸ் போன்று, தாலிபான் பெண்கள் படை ஒன்றை உருவாக்கியுள்ளது. அவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுகின்ற பெண்களை இனிமேல் தாலிபான் பெண் படையினர் அடக்குவார்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு உலக நாடுகளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று போக போகத்தான் தெரியும்.
Source: Dinakaran
Image Courtesy:UNN