ஆப்கான்: தலைவர்களை தேர்ந்தெடுத்த தலிபான்களின் புதிய அரசு !
தலிபான்களின் புதிய ஆட்சி ஆப்கானிஸ்தானில் அமைய இருப்பதை ஒட்டி, தலிபான்களின் தலைவர் மற்றும் துணை தலைவரின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. எனவே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அங்கு முழுமையான அரசாங்கத்தை ஏற்படுத்த முயற்சியில் தலிபான்கள் தற்பொழுது களம் இறங்கியுள்ளார்கள். சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து புதிய அரசின் நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைபற்றிய தலிபான் அரசின் புதிய தலைவராக முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக அப்துல் கனி பராதர் செயல்படுவார் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் இவர்களின் புதிய அரசாங்கத்தை உலகநாடுகள் அங்கீகரிக்குமாறு என்பதும் பலருடைய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
மேலும் இதை தொடர்ந்து புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று தலிபான் அரசின் தலைவராக முல்லா முகம்மது ஹசன் அகுந்த், துணை தலைவராக அப்துல் கனி பராதர், உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, பாதுகாப்புத்துறை அமைச்சராக யாகூப் உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். முன்னதாக ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.முன்னதாக புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்று தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
Input & image courtesy: India Today