தமிழகத்தில் 81% பெண்களுக்கு விட்டமின் D சத்து குறைபாடு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் 81 சதவீத பெண்களுக்கு விட்டமின் D சத்து குறைபாடு இருக்கிறது.
தமிழகத்தில் 81% பெண்களுக்கு விட்டமின் D சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வு அறிக்கை முடிவை இருக்கிறது. குறிப்பாக விட்டமின் டி சத்து உடலில் குறையும் இப்பொழுது பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்காக முக்கிய காரணமாக இருக்கிறது. விட்டமின் D சத்து என்பது ஒருவரின் உடலுக்கு முக்கியமானது. இதனால் மனசோர்வு, நீரிழிவு நோய், புற்றுநோய், எலும்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்பு முடக்குவாதம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த விட்டமின் குறைபாடு குறித்து சம்பவத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்தது.
இதில் 27 நகரங்களில் இரண்டு புள்ளி இரண்டு லட்சம் மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 81 சதவீத பெண்களுக்கு விடமின்றி குறைபாடு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் விட்டமின் D குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தனியார் நிறுவன அறிக்கையின் படி 79 சதவீத ஆண்களுக்கு குறிப்பிட்ட அளவைவிட குறைந்தது.
இந்த சத்து குறைபாடு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது பெண்களுக்கு 75% ஆக இருக்கிறது. தேசிய சராசரியுடன் ஒப்பிடும் பொழுது இளைஞர்கள் அதிக அளவில் விட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு இருக்கிறது. 25 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 84 சதவீதமும், 25 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு 80 சதவீதமாக இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar