பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் கல்குவாரி சுரங்கம் - இயற்கை வளங்களை அழிக்க திட்டமா?
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டருக்குள் கல்குவாரி செயல்படக்கூடாது என்று தடையை நீக்கி இருக்கிறது தமிழக அரசு.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் கல்குவாரி செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை நீக்கும் விதமாக தமிழக அரசு தற்போது அரசாணை ஒன்றே வெளியிட்டு இருக்கிறது. இது தற்போது அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தமிழக தொழில் துறை செயலர் கிருஷ்ணன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் பொழுது, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தமிழக அரசு தொழில் துறையால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களின் படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லைக்குள் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தூண்டுதல், பாறைகளை உடைத்தல், குவாரி அமைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தின் போது, இது தொடர்பாக திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் அரசருக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் குவாரி சுரங்கம் தோன்றும் உரிமை பெற்றவர்கள் விருப்பம் கருதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரி மற்றும் சுரங்கம் தோன்றுதல் போன்ற நடவடிக்கை விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து தற்போது அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
இதை எடுத்து குவாரி சுரங்கம் தோண்ட ஒதுக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழ்நாடு சிறு கனிமங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்படி தமிழக அரசுக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் கருத்துருவை அனுப்பி இருக்கிறார். தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனுடைய அறிவிப்பை கூறுகையில், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட அனுமதி இல்லை. அதே நேரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து அதன் எல்லையில் இருந்து செயல்படலாம் என்று திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Thanthi News