அயோத்தி ராமர் கோவிலுக்கு அதிகளவில் நன்கொடை கொடுத்ததிலும் சிறந்த கட்டுமான பொருட்களை செய்து கொடுத்ததிலும் முத்திரை பதித்த தமிழர்கள்!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அதிக அளவில் நன்கொடை கொடுத்தவர் ஒரு தமிழர் தமிழகத்தில் இருந்த பல்வேறு கட்டுமான பொருட்கள் கோவிலுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-30 03:30 GMT

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவிலை கட்ட மின்னல் வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை 15 உறுப்பினர்களோடு சுப்ரீம் கோர்ட் உத்தரவால் அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முதல் தலைவர் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி திறம்படவாதாடி வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 93 வயதான கே பராசுரன் ,வட இந்தியாவின் நகர கட்டிடக்கலையில் புகழ்பெற்ற நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புராவின் தலைமையிலான நிபுணர்களால் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டது.


சென்னை ஐஐடி ஆலோசனையின் பெயரில் 16 மீட்டர் ஆலயத்தில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது . இந்த கோவில் கட்டுமானத்தில் இரும்போ சாதாரண சிமெண்ட்டோ பயன்படுத்தப்படவில்லை . கருங்கற்களும், மார்பில் கற்களும், செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களெல்லாம் பக்தர்களால் ஆளுக்கு ஒரு செங்கல் திட்டத்தின் கீழ் நன்கொடையாக கொடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான பக்தர்களால் வழங்கப்பட்ட செங்கற்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் 1800 கோடி செலவில் 71 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் இந்த கோவில் வளாகத்தில் கோவில் மட்டும் மூன்று ஏக்கரில் கட்டப்படுகிறது.


இதுவரையில் 21 லட்சம் கன அடி கற்கள் கோவில் கட்டுமானத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின. மூலக்கருவரை இருக்கும் தரைத்தளம் , முதல் தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்ட பணி தான் இன்னும் இரண்டாவது தளம் ஏனைய பணிகள் என இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட பணிகள் இருக்கின்றன. இந்த கோவிலில் மூன்று ராமர் சிலைகள் இருக்கும் .இப்போது குழந்தை ராமர் விக்ரகம் தரைத்தரத்தில் வைக்கப்பட்டு வருகிற ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.


27 ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்லும் வகையில் திறக்கப்படுகிறது .இந்த கோவிலுக்கான அறநூறு கிலோ வெண்கல மணி தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.4.1 அடி நீளமுள்ள இந்த மணிகளில் ஜெய்ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்போது நாமக்கலில் 1200 கிலோ எடை கொண்ட 12 வெண்கல மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் , கன்னியாகுமரி உட்பட பல இடங்களிலிருந்து கடல் நீரும் அனைத்து நதிகளில் இருந்து புனித தீர்த்தமும் அபிஷேகத்திற்காக ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


முக்கியமாக இந்த கோவிலின் கருவறை முன்பக்க கதவு உட்பட கோவிலில் உள்ள 44 வாசல்களுக்கும் தேவையான அலங்கார கதவுகள் மாமல்லபுரத்தில் உள்ள 40 மர சிற்பக் கலைஞர்களால் செய்யப்படுகின்றது . அதிகளவில் நன்கொடை கொடுத்தவர் ஒரு தமிழர் என்பதோடு தமிழ்நாட்டில் இருந்து தான் அதிக நன்கொடை பெறப்பட்டுள்ளது ஆக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் தமிழகத்தின் கைவண்ணமும் இருக்கிறது என்பதில் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை.


SOURCE :DAILY THANTHI

Similar News