நர்சுகள் முன் அரைகுறை ஆடைகளுடன் நடனமாடிய தப்ளிகி ஜமாத்தினருக்கு தக்க பாடம் புகட்டுவோம்: யோகி அதிரடி!

நர்சுகள் முன் அரைகுறை ஆடைகளுடன் நடனமாடிய தப்ளிகி ஜமாத்தினருக்கு தக்க பாடம் புகட்டுவோம்: யோகி அதிரடி!

Update: 2020-04-03 13:20 GMT

டெல்லி தப்ளிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் உத்தர பிரதேசம் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜமாத் உறுப்பினர்கள் மருத்துவர்களிடம், நர்சுகளிடம் தவறாக நடந்தும், மதிப்புக்குறைவாகவும் பேசியதாகவும், கேலி செய்து பாடுவதும், அரை நிர்வாணக் கோலத்தில் நடமாடுவதாக மருத்துவர்கள் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளருக்குப் புகார் தெரிவித்தனர். மேலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மருத்துவர்களையும், செவிலியர்களையும் தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்தனர்.

இந்த புகாரின்பேரில் உதவி ஆட்சியர் ஷைலேந்திர சிங், போலீஸ் ஆணையர் மணிஷ் மிஸ்ரா இருவரும் இந்த விவகாரத்தில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படியில் கோட்வாலி காவல் நிலையத்தில் ஆட்டம் போட்டு கலாட்ட செய்த தப்ளிகி ஜமாத் உறுப்பினர்கள் மீது ஐ.பி.சி பிரிவு 354, 294, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தலைமை காவல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் சேர்ந்ந்து தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் செவிலியர்களிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்தது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

இது பற்றி முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரவுக்கும் கீழ்படிய மறுக்கிறார்கள். சட்டத்தையும் மதிக்கவில்லை. பெண் செவிலியர்களிடம் தவறாக நடந்தது ஏற்க முடியாதது. அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறோம். யாரையும் விடமாட்டோம், சரியான பாடம் புகட்டுவோம்" என தெரிவித்தார்.

Similar News