மனசாட்சி இல்லாமல் கோவில் சொத்துக்களை அபகரிப்பதா? உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

கோவில் சொத்தை அபகரிக்க நினைக்கும் மக்களின் செயல்களை கண்டு வேதனை அடைவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.

Update: 2023-01-01 05:32 GMT

கோவில் சொத்துக்கள் அபகரிப்பு வழக்கு என்பது உயர்நீதிமன்றத்தில் வரிசையில் இருக்கும் முக்கியமான பல்வேறு வழக்குகளில் இதுவும் ஒன்று. அதுவும் தமிழகத்தில் தான் இத்தகைய கோவில் சொத்து அபகரிப்பு வழக்குகள் எண்ணிலடங்காய் இருக்கிறது. ஒரு பக்கம் தமிழகத்தில் கோவில்கள் அதிகமாக எண்ணிக்கையில் இருந்தாலும், கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் மற்றும் சொத்துக்களும் தற்போது வரை மக்களால் அபகரிக்கப்பட்ட தான் வருகிறது. அன்றைய காலத்தில் இருந்த மக்கள் கோவில்களுக்கு தங்களுடைய நிலங்களை தானமாக வழங்கிய காலம் மாறிப்போயி, தற்பொழுது கோவில் சொத்துக்களையே அபகரிக்க நினைக்கும் மக்கள் எண்ணத்தை பார்க்கும் பொழுது தனக்கு வேதனை வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்து இருக்கிறார்.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சித்தி கணேசர் மற்றும் பெருமாள் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் ஒன்று தொடர்பான வழக்கு தான் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எப்படி மனசாட்சி இல்லாமல் மக்கள் கோவில் சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார்கள்? என்று வேதனை அடைந்து இருக்கிறார்.


அப்பொழுது பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி சக்கரபாணி கூறுகையில், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாதல் என்பதன் பெயரில் கோவில் சொத்துக்கள் அபகரிப்பு என்பது அதிகமாக தான் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். முன்பு மக்கள் தங்களுடைய சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்தது ஒரு காலம். எப்பொழுது மனசாட்சி இல்லாமல் அத்தகைய சொத்துக்களை அபகரித்து வருகிறார்கள் மக்கள் இந்த காலத்தில் என்று அவர் வேதனையாக தன்னுடைய கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தார்..

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News