சதீஷ் காரில் ரூபாய் 34,400 கோடி மதிப்பிலான பத்து வளர்ச்சி திட்டங்கள்- அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
காங்கிரசால் ஊழலைத் தவிர எதையும் சிந்திக்க முடியாது என்று சதீஷ்காரில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி கடுமையாக சாடி உள்ளார்.
சதீஷ் காரில் ரூபாய் 34,400 கோடி மதிப்பிலான பத்து வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தும் அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார். காணொளி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் , அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் போது சத்தீஸ்கர் மாநிலம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டும் என கூறினார். மேலும் தனது உரையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
நாடு விடுதலை அடைந்த பிறகு நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் அதன் கவனம் அனைத்தும் அரசை அமைப்பதிலும் தனிப்பட்ட அரசியல் நலனே இருந்தது .மாறாக தேசத்தை கட்டி எழுப்புவதில் இல்லை. காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் அதிகாரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் நாட்டின் எதிர்காலத்தை கட்ட வேண்டியதை மறந்து விட்டது. இன்று கூட காங்கிரஸ் கட்சி முன்பு இருந்தது போலவே அதே திசை மற்றும் விதிமுறையில் இயங்கி வருகிறது.
வாரிசு அரசியல், ஊழல் அரசியல், மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலைக் கடந்து அந்த கட்சியால் எதையும் சிந்திக்க முடியாது. தங்கள் மகன் மற்றும் மகளின் எதிர்காலத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருப்பவர்களால் உங்கள் மகன் மற்றும் மகள்களை பற்றி சிந்திக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 34 லட்சம் கோடிக்கு மேல் குடிமக்களின் வங்கி கணக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கி இருக்கிறது .காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து 15 பைசா மரபு தொடர்ந்திருந்தால் இதில் ரூபாய் 29 லட்சம் கோடி அளவுக்கு இடைத்தரகர்களுக்கு சென்றிருக்கும். மேற்கூரை சோலார் திட்டத்துக்கான நிதி உதவி மக்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அரசு அனுப்பும் .இதில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதுடன் மீதமுள்ள மின்சாரத்தை அரசே வாங்கிக் கொள்ளும் .இதன் மூலம் குடிமக்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் .தரிசு நிலத்தில் சிறிய அளவிலான சோலார் மின் திட்டத்தை அமைக்க விவசாயிகளுக்கு அரசு உதவும். இதன் மூலம் உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மின் உற்பத்தியாளராக மாற முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI