150 ஆண்டுகள் பழமையான கோவில் சேதம்: குவாரி பணிகளை நிறுத்திய மக்கள்!
பல வீடுகள் மற்றும் 150 ஆண்டுகள் பழமையான கோவில் சேதம் காரணமாக அருகிலுள்ள குவாரி பணிகளை தடுத்து நிறுத்திய மக்கள்.;
கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டம் கீழரியூர் கிராம பஞ்சாயத்தில் உள்ள நடுவத்தூரில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அனப்பரா கிரானைட் குவாரி நிர்வாகம் பலமுறை முயற்சித்தும் அப்பகுதி மக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து கிரானைட் கற்களை ஏற்றிச் செல்ல காவல்துறையின் உதவியை நிர்வாகம் நாடியது. ஆனால் பல விதிமுறைகளை மீறி, பல வீடுகளுக்கும், 150 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கும் சேதம் விளைவித்ததாகக் கூறி, குவாரியை மூடக் கோரி, நடவடிக்கைக் குழு அமைத்து அப்பகுதி மக்கள், அசைய மறுத்தனர்.
"மேலும் இந்த குவாரி பணிகள் காரணமாக குறைந்தது 27 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் ஐந்து வீடுகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. தவிர, ஆறு கிணறுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது" என்று நடவடிக்கை குழு உறுப்பினர் கே.சி.பாபு கூறுகையில், குவாரியை மூட உதவி கோரி பல இடங்களில் புகார் அளித்தும் ஒன்றும் பயனில்லை என்று கூறினார். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல்லியடி நடுவத்தூர் மகா சிவ க்ஷேத்திரத்திற்கு ஏற்பட்ட சேதம் அப்பகுதி மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.
குவாரி பணிகளின் போது கோயிலின் சுவர்கள், கோபுரம், கருவறை, குளத்தின் படிகள் மற்றும் பலவற்றில் பல விரிசல்கள் உள்ளன. குவாரியால் குளத்தில் உள்ள நீர் மாசுபட்டுள்ளது என்று மேலும் திரு. பாபு கூறினார். இது வடக்கு கேரளாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். மேலும் தனித்துவமான சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்ட இந்த கட்டிடக்கலை மாதிரியை சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
Input & Image courtesy: The Hindu