பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்க் !
உலக பெரும் பணக்காரராக விளங்கி வருபவர்களில் எலான் மஸ்க் ஒருவர் ஆவார். இவர் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு வருகின்றார் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
உலக பெரும் பணக்காரராக விளங்கி வருபவர்களில் எலான் மஸ்க் ஒருவர் ஆவார். இவர் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு வருகின்றார் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
'டெஸ்லா' நிறுவனம் மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக இறக்குமதி வரியை குறைக்குமாறு பிரதமர் அலுவலகத்துக்கு எலான் மஸ்க் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அது மட்டுமின்றி பிரதமர் மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பாகவே, மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi