இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய ஆசிரியர் பணியை தொடரவும், பணி உயர்வுக்காகவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த சட்டங்கள் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அனைத்து ஆசிரியர்களும் பெரும் பயத்தில் உள்ளனர்.
மேலும் ஓய்வுபெரும் வயது அடைய ஐந்தாண்டு அளவிற்கு ஆசிரியர் பணியில் தொடரலாம் எனவும், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பதவிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் கட்டாயமாக ஆசிரியர் தகுதி தேர்வினை எழுத வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபாநாயகராக இருக்கும் அப்பாவு ஆசிரியர்களுக்கு எதிராக தற்பொழுது உள்ள அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும், விரைவில் அரசு ஆசிரியர்களுக்கான உதவி கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.
என்னதான் சபாநாயகர் அப்பாவு ஆசிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் கூறினாலும் அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சரியான நியாயம் கிடைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.