ஆயிரம் ஆண்டு வழக்கம் - வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கும் சிறப்பு!

1000 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு முறைப்படி நகைகளுடன் புறப்பட்ட நகரத்தார்கள்.

Update: 2022-04-24 02:12 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் வைத்தீஸ்வரன்-தையல்நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தின் முதல் வாரத்தின் போது பக்தர்கள் சித்ரா பவுர்ணமி விரதம் இருந்து பாதுகாத்தல் சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பாதயாத்திரையின் போது தையல் நாயகி அம்மனுக்கு சார்த்தப்படும் நகைகள் அனைத்தும் பாதயாத்திரை மற்றும் மாட்டு வண்டியின் மூலமாக கோவிலை சென்றடைந்தது வழக்கம். இது ஆயிரம் ஆண்டுகளாக கோவிலில் இருக்கும் ஒரு வழக்கம். 


இக்கோவிலுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழசேவல் பட்டியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு அம்மனுக்கு நகைகளை அணிவித்து மீண்டும் இதை பாதை படியாக பாதயாத்திரையாக திரும்புகிறார்கள். பாதயாத்திரையின் போது மாட்டுவண்டியில் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சமைப்பதற்கு அனைத்து பொருட்களும் எடுத்துக் கொண்டு உடன் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதயாத்திரை கீழசேவல்பட்டியில் தொடங்கி திருமயம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், வழியாக வருகிற செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவில் சென்றடையும்.


இந்த பாதயாத்திரை குழுவினர் நேற்று இரவு புதுக்கோட்டை வந்தடைந்தனர். அப்போது பக்தர்களுக்கு பழம், குடிப்பதற்கு தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதயாத்திரை நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது பாதயாத்திரைக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.  

Input & Image courtesy: Twitter source

Tags:    

Similar News