தலைவாசல் கால்நடை பூங்கா மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

தலைவாசல் கால்நடை பூங்கா மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

Update: 2019-02-16 09:25 GMT

சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக எடப்பாடி அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தலைவாசல் கால்நடை பூங்கா மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். இது குறித்து மேலும் பேசிய அவர், ஆத்தூரில் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு புதிய குழாய் பதிப்பதற்கு ₹40 கோடி செலவில் புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆத்தூருக்கு குடிநீர் வழங்கப்படும். 


அந்த திட்டம் செயல்படுத்தப்படும் வரை தற்காலிகமாக ஆத்தூரில் புதிதாக இரண்டு கிணறுகள் தோண்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. அது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உலக அளவிலேயே கால்நடை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு தலைவாசலில் ₹400 கோடி மதிப்பில் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அந்தத் திட்டம் செயல்படும் போது இந்த பகுதியில் வாழும் 4000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது' என்று கூறியுள்ளார்.


Similar News