அளவுக்கதிகமாக இதை உட்கொள்வதும் ஆபத்தா ?
What are the benefits of eating bananas.
வாழைப்பழம், சந்தைகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதன் விலையும் குறைவாகவே உள்ளது. வாழைப்பழத்தில் வைட்டமின் A, K, E ஆகிய வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், செலினியம், தாமிரம், தியாமின், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு ஆகிய தாதுக்களும் உள்ளன. வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.
வாழைப்பழம் எரிச்சல் உணர்வை சமாளிக்க உதவுகிறது மற்றும் அதிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. உடல் எடையைக் குறைக்க வாழைப்பழம் பயனுள்ளதாக அமைகிறது. வாழைப்பழம் சாப்பிடுவது கண்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் கண்கள் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. வாழைப்பழத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது இதயத்திற்கும் நன்மை பயக்கிறது. அல்சர் நோயாளிகளுக்கு வாழைப்பழம் பயனுள்ளதாக இருக்கிறது. வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இரைப்பையின் அமிலத்தன்மையைக் குறைத்து நிவாரணம் பெற முடிகிறது. வாழைப்பழத்தை தவறாமல் உட்கொள்வதன் மூலம், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க இயலும்.
வாழைப்பழத்தில் அதிகபட்சமாக 100 முதல் 120 கலோரிகள் உள்ளன. ஆகவே, வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வாழைப்பழத்தின் துகள்கள் பற்களில் சிக்கிக்கொண்டால், அது பற்கள் தொடர்பான வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. வாழைப்பழத்தில் அதிக அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன, இதனை கட்டுப்பாடில்லாமல் எடுத்துக் கொள்ளும் போது, இது தலைவலிக்கு வழிவகுக்கிறது. வாழைப்பழத்தில் உடலை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை நீக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மக்கள் மன அழுத்தமும் கவலையும் அடையும் போது, ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும். மாணவர்கள் பரீட்சைக்கு முன்னர் வாழைப்பழத்தை கட்டாயமாக சாப்பிட வேண்டும். ஏனெனில், இதனால் அவர்களின் மூளை வேகமாகவும் திறம்படவும் செயல்படுகிறது, என சிலர் கூறுகிறார்கள்.
Input:eatthis
Image courtesy: wikipedia