'கோவில், மசூதி, தேவாலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது' - அண்ணாமலை அதிரடி

'கோவில், மசூதி, தேவாலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என்பது பாஜகவை கருத்தாக உள்ளது' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-10 01:45 GMT

'கோவில், மசூதி, தேவாலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என்பது பாஜகவை கருத்தாக உள்ளது' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.


அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 'மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக 26,135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலைவாழ் இளைஞர்கள் 100 பேர் கொண்ட குழுவாக வந்தால் அவர்களுக்கு காபி பயிர் விற்பனை இயக்கத்தை ஏற்காட்டில் ஏற்படுத்தி தருவதாக உறுதி அளிக்கிறேன்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'மதுரை ஆதீனம் மீது சேகர்பாபு கங்கணம் கட்டிக்கொண்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை ஆதீனத்தை பொருத்தவரை அவர் எந்த இடத்திலும் தமிழ்நாடு அரசு விமர்சித்து பேசவில்லை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் வரக்கூடாது என்றுதான் மதுரை ஆதீனம் கூறினார்.

அவருடைய கருத்தை சொல்வதற்கு மதுரை ஆதீனத்திற்கு முழு உரிமை இருக்கிறது ஆனால் சேகர்பாபு அதை மிரட்டி வருகிறார்' என்றார்.

மேலும், 'கோவில், மசூதி, தேவாலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என்பதே பாரதிய ஜனதா கட்சியின் கருத்தாக உள்ளது' எனவும் தெரிவித்தார்.


Source - News 7 Tamil

Similar News