மகளிர் தினத்தை ஒட்டி மகளிருக்காக சிலிண்டர் விலையில் மத்திய அரசு செய்த நன்மை!
மகளிர் தினத்தை ஒட்டி மத்திய அரசு மகளிருக்காக சிலிண்டரின் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறது. ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம். மகளிர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எல்.பி.ஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும்.சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதாக வாழ்வதை உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது "என தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
SOURCE :NEWS