செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதி உதவியை அசத்தலாக தட்டிய மத்திய அரசு

இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பவர்களுக்கு 50% நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

Update: 2023-07-29 17:15 GMT

குஜராத் தலைநகர் காந்தி நகரில் 'செமிகான் இந்தியா 2023' என்ற பெயரில் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களின் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


உலகம் கண்ட ஒவ்வொரு தொழில் புரட்சியும் வெவ்வேறு காலகட்டங்களில் மக்களின் தேவை சார்ந்த  விருப்பங்களால் உந்தப்பட்டது. தற்போது நான்காவது தொழில் புரட்சி இந்தியாவின் விருப்பங்களால் இயக்கப்படுகிறத என்று நம்புகிறேன். செமி கண்டக்டர் தொழில் வளர்ச்சிக்கான முழுமையான சூழல் அமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது இந்த நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து அரசு வரவேற்கிறது.


செமிகான் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் ஊக்கத்தொகைகளை வழங்குகிறோம். இது அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி வசதிகளை அமைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத நிதி உதவி பெறும் இந்தியாவில் செமி கண்டக்டர் துறை அதிவேக வளர்ச்சியை காணும். ஓராண்டுக்கு முன்பு வரை இந்திய செமி கண்டக்டர் துறையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? என வினவினர். தற்போது இந்தியாவில் ஏன் முதலீடு செய்யக்கூடாது என கேட்கின்றனர்.


இன்றைய உலகம் தொழில் துறை 4.0 வுக்கு சாட்சியாகி வருகிறது. இது போன்ற தொழில் புரட்சியை உலகம் கடந்து செல்லும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் விருப்பங்களே அதன் அடிப்படையாக இருந்து வருகிறது. முதல் தொழில் புரட்சிக்கும் அமெரிக்க கனவுக்குமிடையே அதே தொடர்பு காணப்பட்டது . இன்று நான்காவது தொழில் புரட்சிக்கும் இந்திய விருப்பங்களுக்கும் உள்ள அதே தொடர்பை நான் காண்கிறேன்.


இந்திய விருப்பங்கள் நாட்டின் வளர்ச்சியை உந்தித் தள்ளுகிறது. அத்துடன் தீவிர வறுமையை விரைவாக ஒழித்து கீழ் நடுத்தர வர்க்கத்தின் விரைவான எழுச்சியை காணும் தேசமாக மாறி உள்ளது. இந்தியாதனது சர்வதேச பொறுப்புணர்வை புரிந்து கொண்டுள்ளது. எனவே நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பரந்த செயல் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கு உகந்த சூழலை உருவாக்க நாங்கள் சிறந்த முயற்சிகளை எடுத்து வருகிறோம் .


ஜி 20 அமைப்பின் தலைவராக இந்தியா வழங்கிய கருப்பொருள் கூட 'ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' ஆகும். இவை அனைத்தும் இந்தியாவை சேமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு பின்னணியில் உள்ள நமது உணர்வுகள் ஆகும். இந்தியா தனது திறமை மற்றும் திறன் மூலம் உலகிற்கு நன்மை செய்ய விரும்புகிறது. சிறந்த உலகத்திற்காகவும் உலகளாவிய நன்மைக்காகவும் இந்தியாவின் திறனை அதிகரிக்க விரும்புகிறோம். இதில் உங்கள் பங்கேற்பு ஆலோசனைகள் மற்றும் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News