உர மானியத்தால் விவசாயிகளுக்கு உச்சிகுளிர வைத்த மத்திய அரசு!

நடப்பு ரபி பருவத்தில் ரூபாய் 22,303 கோடி உர மானியம் மத்திய சபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-10-26 04:30 GMT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில் நடப்பு ரபி பருவத்தில் பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மாநிலத்தை நிர்ணயிக்கும். உரத்துறையின் யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து மத்திய மந்திரி சபை கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரவி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் நைட்ரஜனுக்கு கிலோ 47 என்றும் பாஸ்பரஸுக்கு ரூபாய் 20.82 என்றும் பொட்டாஷுக்கு ரூபாய் 2.38 என்றும் சல்பருக்கு ரூபாய் 1.89 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரவி பருவத்தில் பாஸ்பெக்டிக் மற்றும் பொட்டாச்சிக் உரங்களுக்கான மானியமாக ரூபாய் 22,303 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காரி பருவத்தில் உரமானியமாக ரூபாய் 38000 கோடி செலவிடப்பட்டது. சர்வதேச அளவில் உயர்ந்த போதிலும் மானியம் கொடுத்து பழைய விலைக்கு விவசாயிகளுக்கு உரம் கிடைக்க செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி டி.ஏ.பி உரம் 50 கிலோ மூட்டை ரூபாய் 1350 என்ற பழைய விலைக்கே கிடைக்கும். என்.பி.கே உரமும் மூட்டைக்கு ரூபாய் 1470 என்ற பழைய விலைக்கு கிடைக்கும் . எஸ்.எஸ்.பி உரத்தின் விலை மூட்டைக்கு சுமார் 500 ஆக இருக்கும். எம்.ஓ ..பி உரத்தின் விலை 1700 இல் இருந்து 1,655 ஆக குறையும் .விவசாயிகளுக்கு போதிய உரங்கள் நியாயமான விலையில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். கடந்த நிதி ஆண்டில் உரமானியமாக ரூபாய் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதம மந்திரியின் நீர் பாசன பயன்பாடு திட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜம்ராணி அணை திட்டத்தையும் சேர்க்க பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரூபாய் 2,584 கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும்.

SOURCE :DAILY THANTHI

Similar News