கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்காக பல்லக்கு சேவை வழங்கும் தேர்தல் ஆணையம்!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு மக்களவை தேர்தல் தொடங்கவிருக்கிறது. அதிகபட்ச வாக்குகள் பதிவாக கர்ப்பிணி முதியவர்களுக்கு பல்லக்கு சேவை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

Update: 2024-04-14 17:48 GMT

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலை பாங்கான இடங்களில் இருந்து கர்ப்பிணிகளும் முதியவர்களும் வந்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிரமம் ஏற்படும் என்பதால் அவர்களை தூக்கி வர சுகாதாரத்துறை சார்பில் பல்லக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.வி.ஆர்.சி புருஷோத்தமின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது .

மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் இது பற்றி கூறுகையில் மலை பாங்கான மற்றும் அணுக முடியாத பகுதிகளில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்காக தாமாக முன்வந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல விருப்பமுள்ளவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் முழு உதவியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புருஷோத்தமின் ,"சேவையை பெறத் தகுதியானவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

மாநிலத்தின் தொலைதூர மலை பாங்கான பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் பல்லக்கு சேவையை சீராக செயல்படுத்த சுகாதார துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்றார் .பொது சுகாதார இயக்குனர் டாக்டர் வினிதா ஷா கூறுகையில் ,ஹரித்வார் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்களைத் தவிர 11 மாவட்டங்களின் தலைமை மருத்துவ அதிகாரிகளிடம் போதுமான எண்ணிக்கையிலான பல்லக்குகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 85 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த  வாக்காளர்களுக்கும் இந்த சேவையை விரிவு படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


SOURCE :Dinaseithi

Similar News