சுற்றுலா பயணியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற மனிதர்!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விமானி கோபி தோட்குரா சுற்றுலா பயணியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெப் பெசோஸ் 'ப்ளூ ஆர்ஜின் ' என்ற விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார். இந்த நிறுவனத்தின் நோக்கம் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகும். அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது.
அந்த வகையில் இதுவரை 31 பேர் விண்வெளிக்கு சுற்றுலா சென்று திரும்பி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக நியூ ஷெப்பர்ட் 25 என்ற திட்டத்தின் கீழ் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை சுற்றுலா பயணிகளாக விண்வெளிக்கு அனுப்ப ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த குழுவில் இந்தியர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த கோபி தோட்டகுரா ஆவார் .இதன் மூலம் சுற்றுலா பயணியாக விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியர் என்று பெருமையை கோபி பெற உள்ளார். மேலும் 1984ல் விண்வெளிக்கு பறந்த இந்திய ராணுவத்தின் விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையும் கோபி பெற உள்ளார் .
இது குறித்து ப்ளூ ஆர்ஜின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "புஷ், ஏரோபாட்டிக் கிளைடர்கள், கடல் விமானங்கள் மற்றும் ஏர் பலூன்கள் போன்றவற்றை இயக்கிய அனுபவம் கொண்ட கோபி சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாகவும் பணியாற்றியுள்ளார்.வாழ்நாள் முழுவதும் பயணிப்பவர் தான் சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மவுண்ட் சிகரத்துக்கு சென்றது அவரது மிக சமீபத்திய சாகசம் என பெருமையுடன் தெரிவித்துள்ளது.
SOURCE :DAILY THANTHI