'தேசப்பணி, தெய்வீகப் பணி' இரண்டிலும் குறைவில்லாமல் நாட்டை வளமோடு நடத்தி வரும் மோடி அரசு!
நாட்டில் ஒருபுறம் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் மோடி பெருமையோடு கூறியுள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் முக்கியமாக மேசனா மாவட்டத்தின் தரப்பகுதியில் உள்ள வாலிநாத் மகாதேவர் கோவிலை திறந்து வைத்த அவர் பின்னர் அங்கு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது காங்கிரசையும் அதன் தலைவர்களையும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
கடவுளின் பணியும் தேசத்தின் பணியும் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நேரம் இது. நாட்டில் ஒருபுறம் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஏழைகளுக்காக லட்சக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து எதிர்மறை சிந்தனையிலேயே வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வெறுப்பின் பாதையை விட்டுவிட தயாராக இல்லை. ராமரின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பியவர்களும் அவரது கோவில் கட்டுவதில் தடைகளை ஏற்படுத்தியவர்களும் இவர்கள்தான். இன்று ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியாக இருக்கும்போது இந்த எதிர்மறை சிந்தனை அவர்கள் தங்கள் வெறுப்பின் பாதையை விட்டு விலகவில்லை இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேசனாவில் நடந்த மற்றொரு நிகழ்ச்சயில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ரூபாய் 8,350 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் செய்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல் முதலில் பூபேந்திர பாட்டீல், மாநில பா. ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
SOURCE :Dailythanthi