அரசு பேருந்தில் அமர்ந்து குடை பிடித்து சென்ற பயணி- அரசு பேருந்தின் அவல நிலை!

மேற்கூரை பழுதடைந்து மழை நீர் ஒழிகியதால் பஸ்ஸில் பயணி ஒருவர் குடை பிடித்து சென்றார்.

Update: 2023-12-03 07:15 GMT

அரச பஸ்ஸின் மேற்கூரை பழுதடைந்து மழை நீர் ஒழுகியதால் பஸ்ஸில் பயணி ஒருவர் குடை பிடித்து சென்றார். திருவாரூர் - மயிலாடுதுறை சாலை என்பது பிரதான சாலையாக இருப்பதால் போக்குவரத்து மிகுந்த பகுதியாக திகழ்கிறது.இந்த வழி பாதையில் மக்கள் வசதிக்காக அரச பஸ்கள் போதிய அளவு இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அப்போது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ்ஸின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து இருந்ததால் பஸ்ஸின் உள் பகுதியில் பல இடங்களில் தண்ணீர் ஒழுகும் நிலை நிலவியது . இதனால் பல்வேறு அவசர பணிக்காக திருவாரூர் வந்து கொண்டிருந்த பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். பஸ்ஸில் பயணம் செய்த ஒரு சிலர் தலையில் துண்டை போட்டுக் கொண்டும் குடை வைத்திருந்தவர் பஸ்ஸிற்குள் குடை பிடித்து பயணம் செய்ய வேண்டிய அவநில நிலையும் ஏற்பட்டது .

அரசு பஸ்கள் நவீனமயமாக்கப்பட்ட இயக்கப்படும் நிலையில் இது போன்ற பழுதடைந்த பழைய பஸ்களை மாற்றிட வேண்டும். முக்கிய வழித்தடமாக இருப்பதாலும் மழைக்காலம் என்பதாலும் நல்ல பஸ்களை இயக்கிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். மயிலாடுதுறை - திருவாரூர் அரசு பஸ்ஸில் குடை பிடித்து சென்ற பயணியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News