காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் கனடாவுக்கு இந்திய தூதர் கேட்ட கேள்வி!

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் ஆதாரம் என்ன இருக்கிறது என்று இந்திய தூதர் கனடாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-11-06 07:30 GMT

கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இருநாட்டு உறவுகளில் சிக்கல் உருவானது. இது தற்போது மெல்ல மெல்ல சீரடைந்து வரும் நிலையில் இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கனடா வெளியிடவில்லை என அந்த நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் 'இந்த கொலை தொடர்பான விசாரணையில் அவர்களுக்கு உதவ இந்த வழக்கில் குறிப்பிட்ட அல்லது பொருத்தமான  தகவல்கள் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை' என தெரிவித்தார் .இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எங்கே? விசாரணையின் முடிவு என்ன? என கேள்விகளை அடுக்கிய இந்திய தூதர், இந்த விசாரணை ஏற்கனவே கறை படிந்து விட்டது என்றும் கூறுவேன் என்றும் தெரிவித்தார்.

SOURCE :DAILY THANTHI

Similar News