டோக்யோவை நெருங்கும் புயல் ! திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டி கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவு பெறுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டி கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், ஜப்பான் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான ஆகஸ்ட் 8ம் தேதி டோக்கியோ நகரத்தை புயல் தாக்க வாய்ப்பு இருக்கிறது. வருகின்ற 7ம் தேதி மதியம் முதல் 8ம் தேதி மாலை வரை கிழக்கு கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், உயர்ந்த அலைகள் எழும்.
மேலும், நிலச்சரிவு, பெருவெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஒலிம்பிக் நிறைவு விழா உட்பட வாட்டர் போலோ, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட போட்டிகள் உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை தான் நடக்க இருக்கிறது. அது மட்டுமின்றி தென்மேற்கு பகுதியில் உள்ள விசுவோகாவில் சைக்கிள் டிராக் பந்தயமும், நகரின் வடதிசையில் உள்ள சப்போரோவில் ஆடவருக்கான மாரத்தான் போட்டியும் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, புயல் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பது பற்றி நாங்கள் கவனித்து வருகிறோம். புயல் குறித்து எவ்வித பாரபட்சமுமின்றி தகவல் வெளியிடுவது மிகப்பெரிய அவசியமாகிறது. இதனால் எதிர்வினைகளை தவிரக்க முடியும் என்றார்.
ஒரு வேலை மழை மற்றும் காற்று அதிகமாக இருந்தால் போட்டி நடைபெறுவதை நிறுத்தவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2817741