காங்கிரசின் பலம் குறைந்து பா.ஜனதாவின் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
4 மாநில சட்ட சபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பா. ஜனதா தனித்து ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மூன்றாக குறைகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சதீஷ் கார்,தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசத்தில் பா. ஜனதா ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சதீஷ்கார் இரண்டு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. மேற்கொண்ட இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரம் மாநிலத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. நான்கு மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பா.ஜ.க சொந்த பலத்துடன் 6 மாநிலங்களில் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது.
உத்தரகாண்ட் , அரியானா உத்தரபிரதேசம், குஜராத், கோவா, அசாம் திரிபுரா,மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஏற்கனவே ஆட்சியில் உள்ளது. மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் புதிதாக ஆட்சி அமைக்கிறது. எனவே மொத்தம் 12 மாநிலங்களில் பா.ஜ.க ஆளப்போகிறது. மராட்டியம், மேகாலயா , நாகாலாந்து சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆளும் கட்சி கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தான், சதீஷ்கார், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்காரில் ஆட்சி இழந்த நிலையில் தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்தது. அதனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மூன்றாக குறைந்தது.
பீகார் , ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஆளும் கூட்டணி அரசியல் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியாக இருக்கிறது. அடுத்தபடியாக டெல்லி, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது . சட்டசபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வட மாநிலங்களில் மாபெரும் எதிர்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது என்று ஆம் ஆத்மி பிரமுகர் ஜாஸ்மின் ஷா தெரிவித்துள்ளார்.
SOURCE :DAILY THANTHI