'எனக்கு பிள்ளைகள் இல்லை, நான் உழைப்பது உங்கள் பிள்ளைகளுக்காகவே'- பிரதமர் மோடி!

இந்தியாவில் அரச குடும்பத்தின் வாரிசுகளே பிரதமராகவும் முதல் மந்திரியாகவும் பதவியேற்கும் தீய பழக்கத்தை டீ-வியாபாரி ஒழித்து விட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-05-06 14:11 GMT

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி வலுவாக உள்ள இடவா மெயின்புரி, கன்னோஜ் தொகுதிகளில் போட்டியிடும் பா ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இடாவில் நடந்த இந்த பிரச்சாரத்தில் சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சிகளின் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் .இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

மெயின் புரி, கன்னாஜ், இடாவா ஆகியவை தங்கள் தோட்டம் என சிலர் கருத்துகிறார்கள் வேறு சிலரோ அமைதியும் ரேவதியும் தங்கள் பரம்பரை சொத்து என எண்ணுகிறார்கள். இந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு கார்கள், பங்களாக்கள், அரசியல் செல்வாக்குகள் உள்ளன .இந்த அரச குடும்பத்தின் வாரிசுகளே நாட்டின் பிரதமராகவும் முதல் மந்திரியாகவும் பதவிக்கு வருகின்றனர் .ஆனால் இந்த தீய பழக்கத்தை டீ-வியாபாரி ஒழித்து விட்டார்.

நாட்டின் ஏழைகளுக்கு வீடு தாய்மார்கள் சகோதரிகளுக்கு கழிவறை வசதி ஏழை தலைப்புகளுக்கு மின் வசதியை கியாஸ் குடிநீர் வழங்குவது தான் மோடியின் மரபு இது அனைவருக்கும் ஆனது சமாஜ்வாடியும் காங்கிரசும் தங்களது எதிர்காலத்துக்காகவும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் மோடியும் யோகி ஆதித்யநாத்தும் உங்கள் பிள்ளைகளுக்காக கடினமாக உழைக்கிறோம். எங்களுக்கு பிள்ளைகள் இல்லை.உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டமைக்க உழைக்கிறோம் .இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Similar News