தொலைந்து போன ஏர்பட்ஸை இணையத்தில் தேடி கண்டுபிடித்த வாலிபர்- வைரலாகும் சுவாரஸ்யம்!

தொலைந்து போன ஏர்பட்ஸை இணையத்தில் தேடி கண்டுபிடித்திருக்கிறார் வாலிபர் ஒருவர்.

Update: 2023-12-23 06:00 GMT

கேரளாவில் தொலைந்த ஏர்பட்சை இணையத்தின் உதவியுடன் கோவாவில் இருப்பதை தேடி கண்டுபிடித்துள்ளார் ஒரு வாலிபர் .அவரது கதை இணையத்தில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது . இப்போதுள்ள தொழில்நுட்ப காலத்தில் மின்னணு கருவிகளான செல்போன்கள், ஏர் பட்ஸ் போன்றவற்றை எங்கிருக்கிறது என்று அழகாக கண்டுபிடித்து விட முடியும்.     


ஜி.பி.எஸ் வசதி இணைக்கப்பட்டிருந்தால் எந்த வாகனத்தையும் மற்றும் கருவிகளையும் கண்டுபிடிக்கலாம் . அப்படி கேரளாவில் தொலைந்த ஒரு ஏர்பட்ஸ் கருவியை வாலிபர் ஒருவர் கோவாவில் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளார். அத்துடன் அதை பயன்படுத்தும் நபரின் பெயர் மற்றும் இருப்பிடத்தை கண்காணித்து ஏர் பட்சை மீட்டுத்தரக்கோரி கோவா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நிக்கோடின் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அந்த நபர் "நான் சமீபத்தில் கேரளாவில் எனது புதிய  ஏர்பட்ஸ் கருவிகளை தவறவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில் அது திருடு போனது. இப்போது அது கோவாவில் இருப்பதாக காட்டுகிறது .


அதை எடுத்துக்கொண்ட நபர் எனது  ஏர்பட் கருவிகளுடன் பயணிக்கிறார். அவர் தற்போது இரண்டு நாட்களாக தெற்கு கோவாவில் இருக்கிறார். அதனால் அவர் அங்கு வசிக்கிறார் என்று நினைக்கிறேன். டாக்டர் அல்வார் லயோலா பர்டடோசாலை சால்செட் பகுதியில் அடையாளம் காட்டுகிறது. அந்த பகுதியில் தனது ஹெட்செட் இருப்பதை x பயனாளர்கள் மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரது பதிவு இணையதள வாசிகள் ரசனையை உயர்த்தியுள்ளது .அவருக்கு ஏர்பட் திரும்ப கிடைக்குமா என்பது தான் தெரியவில்லை.


SOURCE :DAILY THANTHI

Similar News