திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க மீண்டும் 'டைம் ஸ்லாட்' அடிப்படையில் டோக்கன் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு
Thirupathi Dharshan New Method
நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் திருப்பதியில் தரிசனத்திற்காக மீண்டும் கால நேர நிர்ணயம் செய்யும் முறையான 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதியில் நேற்று 75,438 பக்தர்கள் தரிசனம் செய்தனர் இந்தநிலையில் பக்தர்கள் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது, காத்திருக்கும் அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றன. தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரை ஆகிறது, ஏற்கனவே இலவச தரிசனத்தில் பக்தர்கள் டோக்கன் அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரே நேரத்தில் பக்தர்கள் குவிந்ததால் அதிகம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதையடுத்து டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் மற்றும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் சீனிவாசன் உள்ளிட்ட இடங்களில் தேவஸ்தான செயல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் பின்னர் தேவஸ்தான செயல் அதிகாரி கூறியதாவது, 'தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் ஏற்கனவே தள்ளுமுள்ளு அதிகமாக காணப்படுகிறது எனவே இலவச தரிசன டோக்கன் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் டைம் ஸ்லாட் அடிப்படையில் மீண்டும் டோக்கன்கள் வழங்கப்பட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. முன்பைவிட இலவச தரிசன டோக்கன்கள் அதிகமாகவும் வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது, இது மட்டு இது மட்டுமல்லாமல் டிக்கெட் வழங்கப்படும் மூன்று கவுண்டர்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் உள்ளவற்றை வழங்கவும் நிழற்குடை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறினார்.
எனவே விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையானை தரிசிக்க டைம் ஸ்லாட் அடிப்படைகள் டோக்கன்கள் வழங்கப்படும் என்றே தெரிகிறது.