பிறந்த குழந்தைகளை பார்க்காமல் மோடியை வரவேற்க வந்த தொண்டர் : 'நான்தான் மோடியின் குடும்பம்' ஆர்ப்பரித்த தொண்டர்கள்- பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

பிறந்த குழந்தைகளை பார்க்காமல் சென்னையில் மோடியை வரவேற்க வந்த தொண்டரைக் கண்டு மோடி நெகிழ்ச்சியுடன் வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார்.

Update: 2024-03-05 08:17 GMT

ஒரு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜனதா கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற ஒரு தொண்டர் குறித்து பிரதமர் நெகிழ்ந்து போய் தம் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் , 'ஒரு மிகவும் சிறப்பான உரையாடல் .சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்தவர்களில் அஸ்வந்த் பிஜாய் என்ற தொண்டரும் இருந்தார். அவர் தனது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் அவர்களை பார்க்காமல் இங்கே வந்திருப்பதாகவும் கூறினார். நான் அவரிடம் நீங்கள் இங்கே வந்திருக்கக்கூடாது எனக் கூறினேன் அத்துடன் அவரது குடும்பத்துக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்'. என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

அர்ப்பணிப்பும் உறுதிப்பாடும் கொண்ட இது போன்ற தொண்டர்கள் நமது கட்சியில் இருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ள பிரதமர் மோடி, 'நமது தொண்டர்களின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்த்து நான் அகம் மகிழ்கிறேன்' என்றும் தெரிவித்து இருந்தார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி ஏ மைதானத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்த போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மோடி மோடி என விண்ணதிர கோஷம் எழுப்பினர். பிரதமர் மோடி பேசுகையில், 'மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள். இந்த நாடுதான் என் குடும்பம் ,இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம் ,என்று கூறிவிட்டு தமிழில் நான் தான் மோடியின் குடும்பம் என்று கூறினார். அதை தொடர்ந்து நான் தான் நான் தான் எனமோடி கோஷம் எழுப்ப அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மோடியின் குடும்பம், மோடியின் குடும்பம் என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

அதை தொடர்ந்து கூட்டத்தினர் எழுந்து நின்று செல்போனில் டார்ச் லைட் அடித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தி ஆர்ப்பரித்தனர். பிரச்சார மாநாடு நடைபெற்ற வளாகத்தின் ஓரங்களில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரின் பிரம்மாண்ட உருவப்படங்களும் அவற்றுடன் தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோரின் உருவப் படங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

SOURCE :DAILY THANTHI

Similar News