மசூதி குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய போலீஸ் அதிகாரிக்கு கேரள முதல்வர் கொடுத்த தண்டனை என்ன?

மசூதிகளை எச்சரித்த காரணத்திற்காக போலீஸ் அதிகாரி ஒருவரை பதவியிலிருந்து நீக்க கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-17 00:35 GMT

கேரளாவில் (ஜூன் 15 அன்று) கண்ணூரில் உள்ள பகுதியில் அமைந்துள்ள மயில் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பிஜு பிரகாஷை அவரது பணிகளில் இருந்து கேரள அரசு நீக்கியது. காவல்துறை அதிகாரி உள்ளூர் மசூதிக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பினார் அதில் அவர் மசூதியில் உள்ள பொறுப்பாளர்களைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். தற்போது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய,  முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக அவருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் நடத்திய சமீபத்திய வன்முறைப் போராட்டங்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அவற்றைக் கருத்தில் கொண்டு கேரளாவில் இத்தகைய கலவரங்கள் நடக்கக்கூடாது என்ற காரணத்திற்காக பிஜு பிரகாஷ் நோட்டீஸை வெளியிட்டார்.


வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஆத்திரமூட்டும் பேச்சுகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு அப்பகுதியில் உள்ள ஜும்ஆ மஸ்ஜித் கமிட்டிக்கு எஸ்ஹோ பிஜு பிரகாஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் மதவெறியை தூண்டவும் பயன்படுத்தக் கூடாது என்று அவர் பள்ளிவாசல் குழுவிடம் கூறியிருந்தார். இந்த அறிவுரையை மீறுபவர்கள் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், மசூதிக்கு சுற்றறிக்கை கிடைத்தவுடன், போலீசாருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் ஏற்பட்டது. இந்த சுற்றறிக்கைக்கு முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் லீக் கண்ணூர் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் கரீம் செளரி, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக முஸ்லிம் தலைவர்கள் கண்ணூர் நகர போலீஸ் கமிஷனரிடம் போலீஸ் அதிகாரி மீது புகார் அளித்தனர். இதன் பெயரில் தற்போது அந்த அதிகாரி மீது கேரள முதல்வர் பணி நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Input & Image courtesy: OpIndia news

Tags:    

Similar News