மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளில் எந்த பாரபட்சமும் கிடையாது - பிரதமர் மோடி உறுதி!

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளில் எந்த பாரபட்சமும் கிடையாது என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-04-19 12:03 GMT

அசாமில் பிரதமர் மோடி நல்பாரி மாவட்டத்தில் அவர் பேசுகையில் இலவச ரேஷன் அரிசியாகட்டும் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகட்டும் எந்த பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் பயன்கள் கிடைக்க செய்கிறோம். நாட்டில் இலவச மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கு வீடு சோலார் பேனல்கள் பொருத்தப்படும். இதற்காக வீட்டு கூரைகளில் சோலார் பவர் செல்கள் பொருத்த முயற்சியை எடுத்திருக்கிறோம். இதன் மூலம் உங்களுக்கு மின் கட்டண பில் வராது.

வருங்காலத்தில் மின்சார வாகனங்கள் வாங்குகிற போது சாலையில் எந்த செலவுமின்றி செல்லலாம் .இன்று வடகிழக்கு மாநிலங்கள் சீரழிந்ததற்கு காங்கிரசே காரணம் .ஆனால் இந்த பிராந்தியத்தை நான் எனது இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருக்கிறேன். அசாமில் முன்பு சாலை வசதிகளே கிடையாது.கடந்த 10 ஆண்டுகளில் தான் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் 2500 km தூரத்துக்கு அதிகமான சாலை வசதி செய்து தந்துள்ளோம் . நாட்டில் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக போகிறோம். அவர்களை ட்ரோன் பைலட்டுகள் ஆக்குவோம் .

அசாம் பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவே ஒவ்வொரு நிமிடத்தையும் நான் செலவழிக்கிறேன். உலகில் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மோடி வலியுறுத்தினார். இந்த விழா மேடையில் பிரதமருக்கு முதல்வர் சர்மா ஒரு மேளத்தை பரிசாக அளித்தார். அதை வாங்கிய மோடி அந்த மேளத்தை அடித்து பார்த்து மகிழ்ந்தார்.


SOURCE :Dinaseithi

Similar News