தோற்றுப்போனவர்களின் பேச்சை கேட்கவேண்டிய அவசியம் இல்லை! பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா !
தோற்றுப்போன ஒரு நாட்டின் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
தோற்றுப்போன ஒரு நாட்டின் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பாகிஸ்தானும், ஓஐசி எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது.
இந்நிலையில், இந்திய தரப்பில் இருந்து பங்கேற்ற வெளியுறவுத்துறை அதிகாரி பவன் பாதே கடுமையான வார்த்தைகளால் பாகிஸ்தானை வறுத்தெடுத்தார். பாகிஸ்தான் ஒரு தோற்றுப்போன நாடு எனவும், அந்த நாட்டில் மனித உரிமைகள் மிகவும் மோசமான நிலையில் மீறப்படுகிறது.
அப்படிப்பட்ட நாட்டின் பேச்சுகளை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டிய அவசியம் எங்கள் நாட்டுக்கு இல்லை என்று பவன் பாதே கூறினார். ஓஐசி அமைப்பு பாகிஸ்தானின் பணயக்கைதியாக சிக்கியிருப்பதால், வேறு வழியின்றி அந்த நாட்டிற்கு ஆதரவாக பேசும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும், பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது. தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொடுப்பது மட்டுமின்றி அவர்களுக்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai