உயரத்தை அடைய வேண்டும்? என்ன செய்யனும்? அப்பவே சொன்னார் திருவள்ளுவர்

உயரத்தை அடைய வேண்டும்? என்ன செய்யனும்? அப்பவே சொன்னார் திருவள்ளுவர்

Update: 2020-04-19 01:55 GMT

"மனதால் எதை நினைக்கவும் நம்பவும் முடிகிறதோ அதை நிச்சயம் அடைய முடியும் - நெப்போலியன் ஹில்"

ஒரு சாதனையை கற்பனை செய்து பார்பதென்பது வெற்றிக்கான நவீன யுத்தி. எப்போதெல்லாம் நம்மீதான நம்பிக்கையில் சிறு தயக்கமோ சஞ்சலமோ வருகிறதோ அப்போதெல்லம் நம்மை நமக்கே புதிதாக அறிமுகம் செய்யும் ஒரு உற்சாக கனவை, நம் இலக்குகளை அடைவதை போன்ற ஓர் உத்வேகமூட்டும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள் நம் உயரம் நமக்கு தெரியும்.

எதை நினைத்தாவது பதட்டமாக இருக்கிறீகளா..? உங்கள் போட்டியாளர்களை அதீதமாக எடை போடாதீர்கள், உங்களின் மதிப்பை குறித்து குறைவாகவும் எடை போடாதீர்கள். நீங்கள் நினைப்பதை விட சிறப்பானவர்கள் நீங்கள். - டி. ஹார்வ் எக்கர்

அச்சத்தை எதிர்கொள்ள சிறந்த வழி அதை எதிர்கொள்வதொன்றே. உங்களை பதட்டத்தில் உள்ளாக்கும் ஒன்றுடன் தினசரி மோதுவதால் நீங்கள் பெறும் அனுபவமும் நம்பிக்கையும் உங்கள் திடத்தை, உறுதியை மேலும் வலுப்படுத்தும்.

உங்களை காயப்படுத்த உங்களை தவிர வேறுயாராலும் முடியாது. - எலீனர் ரூஸ்வெல்ட்

நம் உயரத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டுமெனில் வெற்றிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தோல்விகளிலிருந்து பாடத்தை கற்று கொள்ளுங்கள். - டெனிஸ் வெயிட்லி

சிலர் தாம் தவற விட்ட சில இலக்குகளை நினைத்தே வருந்தி கொண்டிருப்பார்கள். எப்போதும் செய்யா முடியாமல் போனதை நினைத்ததை வருந்துவதை விடவும்.. சில நேரங்களில் நாம் சிறப்பாக செய்து முடித்ததையும் அதற்கு நமக்கு கிடைத்த அங்கீகாரத்தை நினைத்து பெருமை கொள்கிற உற்சாக தருணங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். நம் உச்சம் என்ன, நம் உயரம் என்ன என்பதை நமக்கே அது புலப்படுத்தும் நொடிகளாக அது அமையும்.

பிறருக்கான மனிதராக நீங்கள் இருப்பது உங்களை நீங்களே வீணடித்து கொள்வதற்கு சமம் - மர்லின் மன்ட்ரோ.

தன் உயரம் யாருக்கு புரியவில்லையோ அவரே மற்றவரை உயர்வானவராக, தன்னை விட சிறந்தவராக நினைத்து கொள்வார். இந்த எண்ணத்திற்க்கு பதிலாக நீங்கள் உயர்வாக நினைக்கிற அனைவருக்கும் எந்த வகையிலும் நீங்களும் சளைத்தவரில்லை என்ற எண்ணத்தை விதைத்து பாருங்களேன்!! எப்போது இந்த பொதுவுடைமை மனநிலை வருகிறதோ அப்போது உங்களின் உச்சம் உங்களுக்கு புரியும்... உங்கள் வெற்றிகளும் விரியும்..!!

இத நம்ம தாத்தா அப்பவே சொன்னாருங்க...

விரிந்திருக்கிற குளத்தில், நீரின் உயரம் எத்தனை அளவு உயர்வானதாக இருக்கிறாதோ அதே அளவு அதில் கிளர்ந்தெழுந்த தாமரை மலரின் தண்டின் அளவு உயர்வானதாக இருக்கும். அதை போலவே ஒரு மனிதனின் உள்ளத்தின், ஊக்கத்தின், உத்வேகத்தின், தேடலின் அளவு எத்தனை உயர்வானதாக இருக்குமோ அதே அளவு உயர்வானதாக அவன் வெற்றியும், சாதனைகளும் திகழும்

.

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு. 

Similar News