ஒமைக்ரான் எதிரொலி.. 2 கோடி மக்கள் இரும்பு பெட்டியில் அடைப்பு: சீனா கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அட்டூழியம்!

Update: 2022-01-13 10:32 GMT

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 31 கோடிக்கும் அதிகமானோர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தற்போதைய நிலையில் ஒமைக்ரான் வைரஸ் உருமாறிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்து பல்வேறு கட்டுப்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சீனாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது 55 லட்சம் மக்கள் தொகை கொண்ட அன்யாங்கைத் தவிர மற்ற நகரங்களில் ஒமைக்ரான் தொற்று இரண்டு பேருக்குதான் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளை சிறிய அளவிலான இரும்பு பெட்டி முகாமில் சீனா அடைத்து வைப்பதாக தற்போது வீடியோ வெளியாகி வருகிறது. அந்த வீடியோவில் வரிசையாக இரும்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு வெளியில் சுகாதாரப் பணியாளர்கள் காவல் காத்து வருகின்றனர். இதற்காக ஷிஜியாசுவாங் என்ற மாகாணத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் வளாகம் அமைக்கப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என எண்ணாமல் அனைவரையும் இரும்பு பெட்டியில் அடைத்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி ட்விட்டர் பகுதியில் ஒருவர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அங்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் மக்களை விலங்குகளை போன்று நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு உலக சுகாதார நிறுவனம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News