#MahaShivaratri - சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சதுரகிரியில் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரிநாதர், சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவில் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக இந்த நோய் தொற்று காலத்திலிருந்து மாதத்திற்கு சுமார் எட்டு நாட்கள் மட்டுமே வருகை தரும் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியின் கீழ் கூடுதலாக நான்கு நாட்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.
ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நாட்களில் சதுரகிரி மலையேற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக ஆடி, தை அமாவாசை, மகா சிவாரத்திரி தினத்தன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதுவும் நேற்று மகாசிவராத்திரி பண்டிகையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். சந்திரகிரி சுவாமி நாதன் மகாலிங்கத்துக்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று இரவு முதல் நாளை காலை வரை 4 கால பூஜைகள் நடைபெறுகிறது.
இங்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தார்கள். குறிப்பாக ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் நீராடுவது, சிவலிங்கத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்வது போன்ற செயல்களும் பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இன்று இரவு இக்கோவிலில் நடக்கும் 4 கால பூஜையில் பக்தர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Input & Image Courtesy: Maalaimalar