திருச்சி காவேரி பாலம் மூடப்பட்டுள்ளது: 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் மக்கள்?
திருச்சி காவேரி பாலம் முழுமையாக மூடப்பட்டதன் காரணமாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் சிரமம்.
திருச்சி காவிரி பாலம் சீரமைப்பு பணிக்காக முழுவதுமாக தற்போது மூடப்பட்டு இருக்கிறது. இந்த பாலத்தின் மீது இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தின் முக்கியமான அடையாளமாக விளங்குவது தான் காவேரி பாலம். இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்ட வாகன போட்டிகளுக்கு பெரும் இடையூறில் ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக நெடுஞ்சாலை துறை சார்பில் பணிகள் அவ்வப்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரை சிறப்பு பணிக்காக மட்டும் 2015 ஆம் ஆண்டு 1.35 கோடி மற்றும் 2018 ஆம் ஆண்டு 35 லட்சம் 2019 மீண்டும் இந்த ஒரு பழுதடைந்து இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து தகவல் அளித்தார்கள். அதன் பெயரில் இந்த பாலம் தற்போது சீரமைக்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கட்டப்பட்ட 45 வருடங்கள் ஆகிவிட்டன. கனரா வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக பாலத்தில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பாலத்தில் தற்போது சிறப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக 2 கிலோமீட்டர் இடைவெளியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால் நான்கு சக்கர வாகனங்கள் கனரா வாகனங்கள் என ஓயாமல் இயங்கு கொண்டிருக்கும் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள பழைய காவேரி பாடும் வழியாக மீண்டும் கும்பகோணம் சாலையில் ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வரும். இந்நிலையில் பராமரிப்பு காரணமாக ஆறு மாதத்திற்கு மேலாக இந்த பாலத்தில் வேலைகள் நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Puthiyathalaimurai news