மோசமான நிலையில் விஸ்வேசுவரசுவாமி கோவில் - நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை?
பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் தொடர்பான நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை?
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லூரில் விஸ்வேசுவரசாமி விசாலாட்சி அம்மன் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இது பழமையான கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பானது. வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இந்த கோவில் சுத்தமாக பராமரிப்பு இன்றி என்று தற்போது இருக்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கோரிக்கையை பக்தர்கள் தற்போது முன்வைத்துள்ளார்கள்.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதன் காரணமாக கோவிலில் கம்பீரமாக இருக்கும் ராஜ கோபுரம் தற்போது பொலிவிழந்து வருகிறது. கோவிலின் சுற்று சுவர் விரிசல் விழுந்து வலுவிழந்த நிலையில் காணப்படுகிறது. கோவிலின் வெளியே உள்ள படிக்கட்டுகள் உடைந்து, பக்தர்கள் நடக்க முடியாத அளவிற்கு கற்கள் அங்கும் இங்குமாக மேலெழும்பியவாறு உள்ளது.பக்தர்கள் வேதனை, கோபுரத்தில் உள்ள சிலைகளில் புறா, காகம் உள்ளிட்ட பறவைகள் அதிகம் அமர்வதால் அவற்றின் எச்சங்கள் படிந்து மிக மோசமான நிலையில் கோபுரம் உள்ளது.
கோபுரத்தின் அருகில் ஆங்காங்கே செடிகள் வளர்ப்பது பராமரிப்பின்றி கிடக்கிறது. திருக்கோயில் பிரசித்தி பெற்ற கோயில்களில் பல வருடங்கள் இப்படி பராமரிப்பின்றி கிடக்கிறது பக்தர்களை கவலையடைய செய்துள்ளது. எனவே இதுகுறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவில்களில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Thanthi news