காசி- தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி - தமிழக மாணவர்களை வாரணாசி அழைத்து செல்லும் மத்திய அரசு!
காசி- தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இரண்டு 2000 மாணவர்கள் வாரணாசி செல்ல ஏற்பாடு.
தமிழகத்திற்கும் வாரணாசிக்கும் இடையே பழங்கால தொடர்பு மீட்டெடுத்து வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக காசி தமிழ் சங்கம் என்று பெயரில் வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகின்ற 16ஆம் தேதி அடுத்த மாதம் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் இந்த காசி- தமிழ் சங்கத்தின் கருத்தரங்குங்கள் கலந்துரையாடல்கள் கலாச்சார நிகழ்வுகள் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சுக்கத்தால் அமைக்கப்பட்டுள்ள சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையிலான பாரதிய பாட்ஷா இந்த நிகழ்ச்சிக்காக பரிந்துரையை வழங்கி ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு அறிவு மற்றும் கலாச்சார மரபு நெருக்கமாக கொண்டு வருதல்,நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை பற்றி புரிதலை உருவாக்குதல் மற்றும் இரு பிராந்தியங்களை சேர்த்தல் மக்களுக்கு இடையிலான பிணைப்பு ஆழமாக்குதலை இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என மதியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2000 மேற்பட்ட மாணவர்களை வாரணாசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு ரயில் இணைப்பிற்காக ரயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது மாணவர்களுக்காக ரயில் கட்டணத்தை அரசை செலுத்துமாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வழியாக வந்தது. இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட பல்வேறு கூறுகள் காசுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Dinamani News