மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த மத்திய அரசு ரூ.72,961 கோடி வரி பகிர்வு விடுவிப்பு- தமிழகத்துக்கு ரூபாய் 2,976 கோடி!

மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகை ரூபாய் 72,961 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூபாய் 2,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-23 06:00 GMT

நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41% ஒரு நிதியாண்டில் 14 தவணைகள் மூலமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பெரு நிறுவன வரி, வருமான வரி , சொத்து வரி, சுங்கவரி ஜி.எஸ்.டி போன்றவற்றில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.


இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு வருகிற ஜனவரி மாதம் வழங்க வேண்டிய வரிப்பதிவுத் தொகை ரூபாய் 22,961 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது .இதில் தமிழகத்துக்கு ருபாய் 2976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் வரி பகிர்வின் கூடுதல் தவணைத் தொகை ரூபாய் 72,961.21 கோடி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது. வரும் ஜனவரி மாதம் பத்தாம் தேதி விடுவிக்கப்பட வேண்டிய இந்த வரி பகிர்வு தவணைத் தொகை கடந்த 11-ஆம் தேதியை விடுவிக்கப்பட்டு விட்டது. வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டை கருத்தில் கொண்டு பல்வேறு சமூகநல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது .


அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ஒரு ரூபாய் 13088.51 கோடி, பீகாருக்கு 7,338. 44 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூபாய் 5724.44 கோடி, மேற்கு வங்காளத்துக்கு ரூபாய் 5488.88 கோடி, மராத்தியத்துக்கு துபாய் 4608.96 கோடி, ராஜஸ்தானுக்கு ரூபாய் 4396.64 கோடி, தமிழகத்துக்கு ரூபாய் 2976.10 கோடி, ஆந்திராவுக்கு ரூபாய் 29 52.74 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News