மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்படவேண்டும் என்ற பாணியில் கூறிய TOI பத்திரிகையாளர் சாமியா லத்தீப் - வெடித்தது சர்ச்சை.!

மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்படவேண்டும் என்ற பாணியில் கூறிய TOI பத்திரிகையாளர் சாமியா லத்தீப் - வெடித்தது சர்ச்சை.!

Update: 2020-04-16 03:05 GMT

உலகெங்கிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த கொடிய கொரோனா வைரஸ், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைவும் தாக்க வேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் பணிபுரியும் காஷ்மீர் 'பத்திரிகையாளர்' சாமியா லத்தீப் புதன்கிழமை கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள ஜமல்பூர்-காடியா தொகுதியைச் சேர்ந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காந்திநகரில் முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற குஜராத் முதல்வர் விஜய் ரூபானியுடனான சந்திப்பில் அவர் மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து கொண்டார். இதனால் குஜராத் முதல்வர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்திருக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது வெறுக்கத்தக்க ட்வீட் வைரலான பிறகு, சாமியா லத்தீஃப் தனது ட்விட்டர் கணக்கை செயலிழக்க செய்துள்ளார்.


ஒரு மாதத்திற்கு முன்பு, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரைஷி மறைமுகமாக பிரதமர் மோடியை இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொடிய கொரோனாவால் பாதிப்படைய  வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் என்டிடிவி பத்திரிகையாளர் சுனேத்ரா சவுத்ரி சில ஆண்டுகளுக்கு முன்பு 2009 இல் நரேந்திர மோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டபோது மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.


இதுபோல பல சந்தர்ப்பங்களில், ஊடகத்தை சார்ந்தவர்கள் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் சந்தோஷம் என்று பதிவிட்டுள்ளார். 

 



Similar News