பிரதமர் மோடி- ஜோ பைடன் சந்திப்புக்கு பின்னர் தீர்வுக்கு வந்த வர்த்தக பிரச்சனைகள்- இரு நாடுகளின் பரஸ்பர ஒற்றுமையை நிலைநாட்டிய மோடி!
இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட மோடியின் ஆற்றல்.;
இந்தியாவும் அமெரிக்காவும் உலக வர்த்தக அமைப்பில் தங்களுக்கு இடையே நீடித்து வந்த ஏழு பிரச்சனைகளுக்கும் வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளதாக அறிவித்துள்ளன. இது குறித்து உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்வு அமைப்புக்கு இரு நாடுகளும் கடிதம் அனுப்பி உள்ளன. அமெரிக்காவிலிருந்து கோழி குறிப்பாக கோழிக்கால்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்திருந்ததை எதிர்த்து அமெரிக்க கடந்த 2012 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்திருந்தது.
இது தொடர்பாக விசாரித்த வர்த்தக அமைப்பு இந்தியாவின் செயல்பாடுகள் உலக வர்த்தக விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. மேலும் இந்த முடிவை இந்தியா ஒரே நேரத்தில் செயல்படுத்தாததால் அமெரிக்கா இழப்பீடு கோரியது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் புதுடில்லியில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இடையே ஆன இருதரப்பு சந்திப்புக்கு பின் இந்த வழக்கின் தீர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது .
தீர்வின் ஒரு பகுதியாக சில அமெரிக்க உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஐந்து முதல் 10 சதவீதமாக குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டது. மேலும் இந்த அறிவிப்பு கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதை அடுத்து பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளும்படியான தீர்வு கண்டுள்ளதாக தற்போது இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பில் தெரிவித்துள்ளன.
SOURCE :Kaalaimani. Com