தருமபுரியில் பயங்கரம் - தேர் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு, பலர் காயம்
தர்மபுரியில் ஏற்பட்ட தேர் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தர்மபுரியில் ஏற்பட்ட தேர் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்துவார்கள்.
இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேர் ஊர்வலம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் வயல்வெளிகளில் தேர் வந்து இருக்கும்பொழுது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி எதிர்பாராதவிதமாக முறிந்து தேர் மளமளவென சரிந்தது.
தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் விழுந்ததில் 5 பேர் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து அருகிலிருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்திய காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார், இந்த சம்பவம் குறித்து உடனடியாக அங்கு காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.