கட்டாயம் அனைத்து கல்லூரிகளிலும் CCTV - UGCஇன் புதிய உத்தரவு!

அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று UGC உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-09-20 02:01 GMT

தற்போது பஞ்சாப் பல்கலைக்கழக மாணவி வெளியிட்டுள்ள வீடியோ காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளை தவறுதலாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இது போன்ற மற்றொரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதை முன்னெச்சரிக்கைக்காக பல்கலைக்கழக மானிய குழு புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதன் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு உத்தரவை பிறப்பித்து உள்ளது. கல்லூரிகளின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ராகிங் கொடுமைகள் தொடர்ச்சியாக பல கல்லூரிகளில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வளாகங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கட்டாயம் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறும் தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது.


மாணவ மாணவிகள் தங்கி படிக்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் கழிப்பறைகள் போன்ற பலவற்றில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை கட்டாயம் கல்லூரியின் சார்பாக ஒட்ட வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்தக்கூடிய வகையில் கல்லூரி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News