உக்ரைன் பிரகடனம் - பிரதமர் மோடியின் 'மேஜிக்' : மத்திய அரசு கருத்து!

டெல்லி ஜி 20 மாநாட்டில் உக்கரைன் போர் தொடர்பாக ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறிய செய்திகள்.

Update: 2023-09-11 09:45 GMT

உக்ரைன் போர் தொடர்பான ஜி- 20 பிரகடனத்தை பிளவுபட்ட கருத்ததொற்றுமைக்கு பதிலாக ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தொற்றுமை எனலாம் . இது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான பாதையை காட்டும். பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா என வளரும் நாடுகளுடன் இடைவிடாமல் பேசி இந்தியா கருத்தொற்றுமையை ஏற்படுத்தி உள்ளது. இது பிரதமர் மோடியின் உத்தரவாதம் மற்றும் மேஜிக்கை  காட்டுகிறது. கடந்த ஆண்டு பாலிதீவில் நிறைவேற்றப்பட்ட ஜி-20 பிரகடனத்தில் இருந்து இது மாறுபட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


SOURCE :DAILY THANTHI

Similar News