ரஷ்ய படைகளை தடுத்த உக்ரைன் ராணுவ வீரரின் புகழ் வரலாற்றில் இடம்பெறும்!

Update: 2022-02-27 04:06 GMT

ரஷ்ய படைகளை தடுப்பதற்காக உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகின்றனது. நேற்று (பிப்ரவரி 26) மூன்றாவது நாளாக போர் நடந்து கொண்டிருந்த வேளையில் தெற்கு மாகாணமான கெர்சானில் ரஷ்ய படைகள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தது. அவர்களை தடுக்கின்ற நோக்கத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் பாலத்தை தகர்ப்பதற்காக தன்னிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தனது உயிரையும் விட்டுள்ளார்.

இதன் காரணமாக ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து முன்னோக்கி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பாலத்தை தகர்த்து தனது நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றிய உக்ரைன் நாட்டு ராணுவ வீரரின் புகழ் அந்நாடு இருக்கின்ற வரையில் பேசப்படும். இது பற்றிய புகைப்படங்களை இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜர் மதன் குமார் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். உங்களின் தியாகம் உக்ரைன் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும். உங்களுக்கு வீரவணக்கம் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News