உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் இந்தியா- பிரதமர் மோடிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர்!
உக்ரைன் நாட்டின் கல்வி மையங்களில் திரும்பவும் படிக்க வரும்படி இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து உக்கரைன் அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது இரண்டு ஆண்டுகளாக கடந்து நீடித்து வருகிறது. கீவ்,கார்கீவ்,டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றுவதும் தாக்குவதும் பின்னர் அவற்றை உக்கரைன் பதிலடி கொடுத்து மீட்பதும் தொடர்ந்து வருகிறது. இதில் உக்கரைன் நிலம் நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷ்யா தீவிர போர் தொடுத்து வருகிறது .இரு நாடுகளும் போரை தீவிரபடுத்தி உள்ளன .
போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சு வார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. அமெரிக்கா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கு ஏற்ப அந்நாடுகளும் ராணுவ உதவி வழங்கி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடியை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட உக்கரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அவருடன் பேசும்போது "அமைதியை அமல்படுத்துவதற்கான கூட்டங்களில் பங்கேற்று உக்கரைனின் இறையாண்மை மற்றும் காந்திய ஒருமைப்பாடு மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு இந்திய ஆதரவு அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்து அவருடன் பேசினேன்.
அமைதிக்கான உச்சி மாநாட்டில் இந்தியாவும் பங்கேற்பது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த உச்சி மாநாடு சுசிலாந்தில் தயாராகி வருகிறது" என ஜெலன்ஸ்கி அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்."இந்த பேச்சின் போது எங்களுடைய இருதரப்பு உறுப்புகளின் வளர்ச்சியை பற்றியும் நாங்கள் ஆலோசித்தோம். இந்தியாவுடன் இருதரப்பு பிணைப்புகளை வலுப்படுத்துவது பற்றியும் வலியுறுத்தியவர் உக்கரைன் நாட்டின் கல்வி மையங்களில் திரும்பவும் படிக்க வரும்படி இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஆர்வமாக உள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.