பாகிஸ்தானை தொடர்ந்து பங்களாதேசும்! இந்திய கொடியை பயன்படுத்தி வெளியேறும் மக்கள்!

Update: 2022-03-02 04:12 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்குள்ள பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்காளதேஷ் மக்கள் இந்திய கொடியை வாகனத்தில் கட்டியும், கைகளில் ஏந்தியும் உயிரை காப்பாற்றி வரும் காட்சிகள் தற்போது வெளியாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 7வது நாளாக குண்டுவீசி தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அங்கு ஏராளமானோர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.

தற்போது போர் நடந்து வருவதால் பல மாணவர்கள் தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பதுங்கு குழிகளில் பதுங்கியுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர். அப்படி வெளியேறுபவர்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி தப்பித்து வருகின்றனர். உலகளவில் பிரதமர் மோடி இந்தியர்களின் மதிப்பை உயர்த்தி உள்ளார் என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி எனவும் கூறலாம். இந்திய தேசிய கொடியை கையில் எடுத்தாலே உலக நாடுகள் மிரளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News