மோடி அரசின் கீழ் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள இந்தியா-2030க்குள் மும்முடங்கு அதிகரிக்கும்!
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் மதிப்பு 2030-ஆம் ஆண்டுகள் மும்மடங்கு அதிகரிக்கும் என்று நாஸ்காம் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ல் இந்தியாவின் பொது டிஜிட்டல் உள் கட்டமைப்புகளின் மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9% இருந்ததாகவும் இது 2030-க்குள் மும்மடங்கு உயரும் என்றும் நாஸ்காம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நாஸ்காம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் உருவாக்குவதில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டை ஆதரிப்பதன் வாயிலாக சமூக மாற்றத்திற்கும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் உறுதி செய்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும் உலக நாடுகளுக்குள் ஒருங்கிணைத்தல், வெளிப்படைைத்தன்மையாக்கும் டிஜிட்டல் பொது உள் கட்டமைப்புகள் எண்ணற்ற ஆற்றல் கொண்டது.
ஆதார் , யு.பி.ஐ மற்றும் பாஸ்டேக் போன்ற இந்திய டிஜிட்டல் பொது உள் கட்டமைப்புகளின் மதிப்பு கடந்த 2002 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2. 63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதம் 2030-ம் ஆண்டுக்குள் 2.94 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு நாஸ்காம் அறியையயில் தெரிவித்துள்ளது.
SOURCE :Kaalaimani.com