பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தயார் - இமாச்சல் முதல்வர் அதிரடி அறிவிப்பு!
இமாச்சல் பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக முதல்வர் அவர்கள் கருத்து.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் தற்போது உள்ள அரசு செய்து வருவதாகவும் அந்த மாநிலத்தின் முதல்வர் கூறுகிறார்கள். மேலும் இதுபற்றி விரிவான உரையை தந்துள்ள உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் இதுபற்றிக் கூறுகையில், "பொது சிவில் சட்டம் ஒரு நல்ல நடவடிக்கை. அதை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த அமல்படுத்துவது தொடர்பாக உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரிய அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறினார். மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமைக்க மத்திய அரசு தற்போது வரை முழு முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே இந்தியர் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் தற்போது உரிமைச் சட்டத்தை வரவேற்க இந்த பொது சிவில் சட்டம் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதற்கு முதல் படியாக நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம். உத்தரப்பிரதேச மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு இது அவசியம். பா.ஜ.கவின் முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்றும் கூறினார். இத்தகையதொரு சூழ்நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இமாச்சலப் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் அவர்கள் இதுபற்றி கூறுகையில், மாநில அரசு பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளது. அதன் முடிவுகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
Input & Image courtesy: Vikatan News