இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இனி சீருடை!
இந்து அறநிலையத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அச்சகத்திற்கு சீருடை வழங்கும் திட்டம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவிலில் உள்ள ஊழியர்களும் மற்றும் அர்ச்சகர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று தொடங்கி வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அங்கு பணியாற்றும் ஊழியர்களான அனைவரும் சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களான அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், ஓதுவாா்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும், திருக்கோயில் பணியாளா்களுக்கு நபருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடையும் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
கோயில்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களையும் எளிதில் அடையாளம் காணும் வகையில் அா்ச்சகா், பூசாரிகளுக்கு மயில்கண் கரை பருத்தி வேட்டியும், கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளா்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற கரையுடன் கூடிய புடவையும், ஆண் பணியாளா்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேல்சட்டை துணியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 36 ஆயிரத்து 684 கோயில்களில் பணிபுரியும் சுமாா் 52 ஆயிரத்து 803 பணியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் உள்ளார்கள்.
Input & Image courtesy: The Hindu